
சத்தம் ஏதும் இல்லாமல் முனு முனுப்புடன்
விரல்கள் அசைவில் வீரியம் இல்லாமல்
தொடு உணர்ச்சி செயலற்றும்
பார்வைகள் மட்டும் எங்கோ செல்ல
இதயம் இருமுறை மட்டும்
இரு உதடுகள் நீரிண்டி வரண்டு
அருகமந்தவன் கையை மட்டும் விடாமல் பற்றி
வாகனங்களில் செல்பவர்கள் வக்கனை பேசிக்கொண்டு
நிண்டவர்கள், பின் சூழ்ந்தவர்கள் ..
பாவம் என்ற ஒரு வார்த்தை மட்டும் நூரேழு முறை
நேருந்த கடைகாரன் வேருடென்று வேகமாய் சட்டரை சாத்த

வந்து கொண்டிருண்ட சிவப்பனுக்கள் சென்று கொண்டிருந்தன
தயவுசெய்து காத்து விடுங்க என்று முனைப்பாய்
உள் சென்று எட்டி பார்தவர்களில் இவன் பதிநெட்டாதவன்
முச்சில் இருந்த சத்து மெல்ல குறைந்தது
மெல்லமாய் ஆள் காட்டி விரல் மட்டும் உயிர் பெற்று காட்டியது

இந்த வெறியர்களுக்கு தெரியுமோ !!
என் தாய் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறாள்
தயவுசெய்து
இந்த மருந்தை அவளிடம் .........