Tuesday, February 19, 2013

Valentine's Day gift for my wife


என்னவளே உன்னை என்று கண்டேனோ  
அன்றே அனேனடி பித்தன் !.. 

மை  இருட்டிலும் மௌனம் கலந்து நடக்கிறேன்   
பழகியதொரு பாதை போல் வேகமாய் வெருடென்று  

சற்றும் சலனமில்லாமல் புகுந்தவளே  
எங்கிருந்தாயடி இத்துணை நாள் ! ... 

கல்லுக்கும் மண்ணுக்கும் ஓடிய நீரை இன்று  
சிறு புல்லுக்கும்,பூவுக்கும் வாரி இறைத்தவளே ! .... 
                                                                                                       
இந்த மூடிய சிப்பிக்குள்ளும் முத்தெடுதவளே   
என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் சொன்னவளே  !                                                          

கடலில் கலைந்த கரைந்த தொரு பெட்டிக்கு  
புது சாவி இட்டவளே ! என் இனியவளே !!

இறைவா !
கோடி முறை நன்றி கூறி  
உன் புகழை குறைக்க விரும்ப வில்லை .. 
     என்னவளை தந்தமைக்கு . 

வரிந்து கேட்கிறேன் உன்னிடம் ஒன்று  
குனிந்து, கோலுன்றி, நரைதிரை கொண்டு,  
கிழப்பருவம் எத்தி நடக்கையிலும் பிடித்திருக்க வேண்டும்  

என்னவளின் கை ...  

--------க.ஜெயவேல்----------- 

Wednesday, December 8, 2010

Sabarimalai important telephone numbers-முக்கிய டெலிபோன் எண்கள்

சபரிமலை சன்னிதானம்
எஸ்டிடி கோடு 04735


தலைவர், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு - 202 034

சிறப்பு கமிஷனர் - 202 015

தேவஸ்வம் கமிஷனர் - 202 004

லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி. - 202 081

லஞ்ச ஒழிப்புஅதிகாரி (கோயில்) - 202 058

செயல் அலுவலர் - 202 028

உதவி செயல் அலுவலர் - 202 019

நிர்வாக அலுவலகம் - 202 026

காணிக்கை தனி அதிகாரி - 202 017

மாளிகைப்புறம் கோயில் - 202 022

விருந்தினர் மாளிகை (கெஸ்ட்ஹவுஸ்) - 202 056

அறைகள் பதிவு அலுவலகம் - 202 049

செய்தித்துறை அதிகாரி - 202 048

புக் ஸ்டால் - 202 053

நிர்வாக அதிகாரி - 202 038

தனலட்சுமி பாங்க் - 202 065

அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 101

அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரி - 202 102

அரசு ஹோமியோபதி ஆஸ்பத்திரி - 202 843

அரசு இதய நோய் மையம் - 202 050

கன்ட்ரோல் ரூம் எஸ்.பி. - 202 029

டி.ஐ.ஜி. முகாம் - 202 076

போலீஸ் ஸ்டேஷன் - 202 062

போலீஸ் வயர்லஸ் ஸ்டேஷன் - 202 033

போஸ்ட் ஆபீஸ் - 202 130


பம்பை


தினமலர் தகவல் மையம் - 202 377

டெலிபோன் எக்சேஞ்ச் - 202 198

தேவஸ்வம் போர்டு விருந்தினர்
விடுதி தலைவர் - 202 466

நிர்வாக அதிகாரி - 202 442

பெட்ரோல் பங்க் - 202 046

உதவி மக்கள் தொடர்பு அதிகாரி - 202 339

டோல்கேட் (சாலக்கயம்) - 202 522

அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 318

தனலட்சுமி பாங்க் - 202 465

கேரள அரசு போக்குவரத்து கழகம் - 202 445

மின்சார வாரியம் - 202 424

தீயணைப்பு நிலையம் - 202 333

போஸ்ட் ஆபீஸ் - 202 330

போலீஸ் ஸ்டேஷன் - 202 412

போலீஸ் கன்ட்ரோல் ரூம் - 202 324

மாலை அணியும் முறை --procedure to wear sabarimalai maalai

மாலை அணியும் முறை
சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) முன்னதாக அதாவது கார்த்திகை மாதம் முதல் தேதியே முத்திரை மாலையான ருத்ராட்சம். துளசிமணி இவைகளில் ஒன்றை குருநாதர் மூலம் கோயிலிலோ, வீட்டிலோ பூஜை செய்து அணிந்து கொள்ள வேண்டும்.

குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம் .இருமுடி பொருட்கள்!இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முன்முடியில் வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்:

1. மஞ்சள் பொடி (குறைந்தது 100 கிராம்) (மலைநடை பகவதி, மஞ்சமாதாவுக்காக)

2. சந்தன பாக்கெட்

3. குங்கும பாக்கெட்

4. நெய் தேங்காய் - 1

5. சுதாதமான பசுவின் நெய்

6. விடலை தேங்காய் - 5 (எரிமேலி, சபரிபீடம், சரம்குத்தி, பதிöட்டாம்படி ஏறும்போதும், இறங்கும்போதும்)

7. பன்னீர் பாட்டில் (சிறியது)

8. கற்பூர பாக்கெட்

9. பச்சரிசி

பின் முடியில் சமையல் செய்து சாப்பிடுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த அளவு எடுத்து செல்லலாம்.


கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்1. மாலை அணிந்து கொள்ளும் பக்தர் மிக முக்கியமாக பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும்

2. காலை - மாலை இரு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து வழிபட வேண்டும்

3. இறைச்சி உண்ணக்கூடாது. மது அருந்தக்கூடாது. பீடி, சிகரெட் போன்ற பொருட்களை அறவே நீக்கிவிட வேண்டும்.

4. கறுப்பு, நீலம், பச்சை, காவி போன்ற கலர் வேட்டிகளையும், கலர்சட்டைகளையும் அணிய வேண்டும்.

5. குருவிடம் அணிந்த மாலையை எக்காரணத்தை கொண்டும் குளிக்கும்போது கூட கழற்ற கூடாது.

6. நமது நெருங்கிய ரத்த தொடர்பு உள்ள தாய், தந்தை, அக்காள், தங்கை, தம்பி, அண்ணன் போன்றவர்களின் மரணம் ஏற்படுமாயின் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிவிட்டுத்தான் துக்க காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

7. மாலையை கழற்றிவிட்டால் அந்த ஆண்டு மலைக்கு செல்வதை விட்டுவிட வேண்டும்

8. பெண்களின் சடங்கு நிகழ்ச்சிக்கோ, குழந்தை பிறந்த வீட்டுக்கோ செல்லக்கூடாது.

9. பெண்கள் மாதவிடாய் ஆரம்பித்து 7 நாட்கள் சென்ற பின்னர்தான் அவர்களிடம் உணவு சாப்பிட வேண்டும்.

10. மாலை அணிந்த எந்த பக்தன் வீட்டிலும் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது. பால், பழம் கொடுத்தால் சாப்பிடலாம்.வழி தேவைக்கு...
வழிதேவைக்கு ஜோல்னா பையில் மறக்காலம் எடுத்து செல்ல வேண்டியவை.

பேட்டரி லைட் டூத் பேஸ்ட், பிரஷ், திருநீறு, சந்தனம், குங்குமம், மாற்றுவேஷ்டி, கற்பூரம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, சட்டை, துண்டு, மழைக்காக பிளாஸ்டிக் பேப்பர் சின்னகத்தி, டம்ளர், தண்ணீர் பாட்டில், ஸ்வெட்டர், மப்ளர், தீப்பெட்டி, திருவிளக்கு, திரிநூல், நெய்.இருமுடி தாங்கி செல்லும்போதும், வழியில் உபயோகிக்கவும் ஒரு கம்பளம் ஒரு விரிப்பு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.


ஐயப்பனுக்கு சாஸ்தா என ஏன் பெயர் வந்தது?சாஸ்தா என்ற சொல் தற்போது தென்மாவட்ட மக்களால் சாத்தா என்று அழைக்கப்படுகிறது. சாத்து என்றால் கூட்டம் என பொருள். ஐயப்பன் கோயிலுக்கு வருபவர்கள் தனித்து வர முடியாது. கூட்டமாகத்தான் வரமுடியும். கூட்டமாக வந்து வணங்குவதால் இவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

ஒரு காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 60 முதல் 70 பேர் வரை மட்டுமே சென்றார்கள். இப்போது செல்வதைப் போல லட்சக்கணக்கில் பக்தர்கள் அங்கு சென்றதில்லை. அப்படி செல்லும்போது கோடரி, ஈட்டி முதலிய ஆயுதங்களை எடுத்துச் செல்வார்கள்.

அப்படி சென்றாலும்கூட மிருகங்களிடம் சிக்கி பலரும் இறந்துவிடுவதுண்டு. 15 பேர்தான் திரும்பி வருவார்கள். அப்படி திரும்பி வருபவர்களை பக்தியுடன் ஏற்று குருசாமியாக கொள்ளும் வழக்கம் பழங்காலத்தில் ஏற்பட்டது.

இப்போதும் ஐயப்ப சுவாமிகளுக்கு தலைமை ஏற்று செல்பவரை குருசாமி என்றுதான் அழைக்கிறார்கள்.நெய் கொண்டு செல்வது ஏன்?ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார்.

அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.ஐயப்பனின் முதல் தலம்மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் என்ற 7 வகை நிலையைப் பற்றி பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் அவனது மூலாதாரம்... கால்கள்.. சுவாதிஷ்டானம் இடுப்பு, மணிபூரகம் - வயிறு, அனாகதம்- பிறப்புறுப்பு, விசுத்தி - மனம், ஆக்ஞை - பிடரி, பிரம்மாந்திரம் - தலை ஆக 7 வகை நிலையில் மனிதனின் உடலமைப்பு உள்ளது. சிவனை எடுத்தக் கொண்டால் அவரது மூலாதாரம் - திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் - திருவண்ணாமலை, அனாகதம் - சிதம்பரம், விசுத்தி - காளத்தி, ஆக்ஞை - காசி, பிரம்மாந்திரம் - கைலாசம்.

அதுபோல தர்மசாஸ்தா எனப்படும் ஐயப்பனுக்கு மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன் கோயில், மணிபூரகம் - ஆரியங்காவு, அனாகதம் - குளத்துப்புழை, விசுத்தி - பந்தளம், ஆக்ஞை - சபரிமலை, பிரம்மாந்திரம் - காந்தமலை. இந்த வகையில் சபரிமலை சாஸ்தாவுக்கு முதல் முதலில் கோயில் தோன்றியதாக கூறப்படுவது பாபாநசத்திலுள்ள சொரிமுத்தையனார் கோயில் ஆகும்.

தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.நமஸ்கார ஸ்லோகம் ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்தினம்ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணம்மய்யா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

1.லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரஹாகரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்

ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்

ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்

அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
5. பாண்டிச்யேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்

ஆர்த்தத் ராண பரம தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
6. த்ரியம்பக புராதீசம் ககணாதீப சமன் விரதம்

கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம். (சுவாமியே சரணம் ஐயப்பா)
7. சிவ வீர்ய சமுத் பூதம் ஸ்ரீ நிவாச தானூர்த் பவம்

சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)மாலை அணியும் மந்திரம்ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்

வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்

சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம்

சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே

குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரினே -

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்

சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்

சபர்யாசல முத்தராயை நமஸ்துப்யம் நமோ நவ;மாலை கழற்றும் மந்திரம்அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே

சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - வேஹமே விரத விமோசனம்.ஐயப்பன் 18 படி தெய்வங்கள்


1. விநாயகர்

2. சிவன்

3. பார்வதி

4. முருகன்

5. பிரம்மா

6. விஷ்ணு

7. ரங்கநாதன்

8. காளி

9. எமன்

10. சூரியன்

11. சந்திரன்

12. செவ்வாய்

13. புதன்

14. குரு

15. சுக்கிரன்

16. சனி

17. ராகு

18. கேது

சரண மாலை

சரண மாலைமகா கணபதி தியான ஸ்லோகம்


மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே


ஐயப்பனுக்கு மாலை அணியும் முன் சொல்லும் மந்திரம்
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம்
குருமுத்ராம் நமாம் யஹம்

வன முத்ராம் சுக்த முத்ராம்
ருத்ர முத்ராம் நமாம் யஹம்

சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம்
வருதமுத்ராம் நமாம் யஹம்

சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம்
யாதுதா சேதாபிமே

குருதக்ஷ்ண்யா பூர்வம் தஸ்யா
நுக்ரஹ காரினே

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம்
தாரயா யஹம்

சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம்
நமாம் யஹம்

சபர்யாசல முத்தராயை
நமஸ்துப்யம் நமோ நம;

சாஸ்தா காயத்ரீஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்


ஐயப்பன் மகா மந்திரம்

ஸ்ரீ பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா

ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹஐயப்பன் 108 சரணக் கோவை


ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா


ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

சாஸ்தா சதகம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்

1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

(சுவாமியே சரணம் ஐயப்பா)

10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே

(சுவாமியே சரணம் ஐயப்பா)ஐயப்பன் கவசம்


கணபதி துதி
அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே
ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமேநூல்


மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.வேண்டுதல்


சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணிணைக் காக்க
நாராணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க
கலியுக வரதன் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க

புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க
வீரமணி கண்டன் விரல்களைக் காக்க
கயிலை மைந்தன் மார்பினைக் காக்க
மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
முழுமுதற் கடவுள் முதுகினைக்காக்க
இருமுடிப்பிரியன் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க
தர்மசதஸ்தா என் துடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜயகுமரன் விரல்களைக் காக்க
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாளரூபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க
ஹரியின் மகனார் அநுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இடப்புறம் காக்க
காக்கக் காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க பாபம் பொடிபட

இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க
கொடிய விஷயங்களும் கொள்ள நோய்களும்
குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலைதனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்
பில்லி, சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம் சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எருமேலி தேவா
கல்வியும், செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
காமம், குரோதம், லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்

என்றுமே என்னை அணுகிவிடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்
சூது, பொறாமை, பொய் கோபமில்லாமல்
சோரம், லோபம் துன்மார்க்கம் கல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்
மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன்திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயேநமஸ்காரம்


ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

2. சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

4. துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

5. த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

6. பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

7. களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம

ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம

ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம

ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம

ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம

ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம

ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம

ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம

ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம

ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷிதாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம

ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம

ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம

ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம

ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம

ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம

ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம

ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம

ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம

ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம

ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம

ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம
ஓம் ஜடாதராய நம

ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம

ஓம் ஹரிஹராத்மஜாய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமிபதினெட்டாம் படிகளே சரணம்1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பாமாலை கழற்றும் போது சொல்லும் மந்திரம்அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

ஐயப்ப தரிசனம்---எரிமேலி முதல் சந்நிதானம் வரை

ஐயப்ப தரிசனம்

பெருவழிப்பாதை பயணம்


ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர்.


இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது. இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே.
இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிக்க புறப்படுவோமா!


எருமேலி:

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் இது. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.


வாபர் கோயில்:

எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.பேட்டைதுள்ளல்:

ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், "எருமேலி' என மருவியது. இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல் எனப்படுகிறது. . உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான ஆயுதங்களுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.


பேரூர்தோடு:

பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.காளையை கட்டிய மரம் :

காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது.
காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.அழுதாநதி:

அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம்.
பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது.மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள்.
காவலர் ஐயப்பன் :

அழுதாமலை உச்சியில், "இஞ்சிப்பாறைக்கோட்டை' இருக்கிறது. இங்குள்ள கோயிலில் "தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால் "புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். இந்த ஐயப்பனை வணங்கி விட்டு நடந்தால், முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது. அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும்.
கரிமலை: கரியிலம்தோட்டை அடுத்து கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். இதை விட கடினமான மலை உலகில் இல்லையோ என்று எண்ணுமளவுக்கு பெரும் ஏற்றத்தில் பக்தர்கள் ஏறுகிறார்கள்.


இம்மலையிலுள்ள மண் கருப்பாக இருக்கும். எனவே இம்மலைக்கு "கருமலை' என்ற பெயர் இருந்து "கரிமலை' என்று மாறிவிட்டது. மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.இங்கு சுவையான தண்ணீருடன் கூடிய சுனை உள்ளது. இதை ஐயப்பன் தனது அம்பினால் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நீரை பக்தர்கள் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள்.

கரிமலையில் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். ஏனெனில், ஒரு ஒற்றையடிப் பாதையே நம் கண்முன் தென்படும். ஒரு பக்கம் அதலபாதாளம், மறுபக்கம் உரசும் பாறைகள் என இருப்பதால் மிக கவனமாக ஏற வேண்டும். ஏற்றம் இருக்கும் அளவுக்கு இறக்கமும் பக்தர்களைச் சிரமப்படுத்தும். கால்கள் பின்னி தடுமாறும். ஆனாலும், ஐயப்பன் கருணையுடன் இந்த இடத்தைக் கடக்க அருள்செய்வார். மனதிற்குள் சரணம் சொல்லியபடியே பக்தர்கள் மலையேறுவார்கள். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருக்கிறது என்பதால், இதைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.பெரியானை வட்டம் :

கரிமலையைக் கடந்து சமதளப்பகுதி வருகிறது. இவ்விடத்தை "பெரியானை வட்டம்' என்பர். யானைகள் அதிகமாக வசித்த பகுதி என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
இங்கே பம்பா நதி சிறு ஓடைபோல பாய்கிறது. இங்கிருந்தபடியே மகர ஜோதியை தரிசிக்கலாம் என்பதும் விசேஷத்தகவல். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் "சிறியானை வட்டம்' என்ற பகுதி வருகிறது. இங்கு பம்பை நதி பரந்து ஓடுவதைக் காணலாம். இங்கிருந்து சிறிது தூரம் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.


பம்பா நதி:

எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர்.
கங்கையைப்போன்ற புண்ணிய நதி பம்பா. இந்த நதிக்கரையில் தான் ராமர் தனது தந்தை தசரதருக்கு "பிதுர் தர்ப்பணம்' செய்ததாக கூறுவர்.


இதனடிப்படையில் ஒரு சில பக்தர்கள் இந்த நதியின் முதல் பாலம் அருகே உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர். மற்ற பக்தர்கள் எல்லாம் இங்கு நீராடி நீண்டதூரம் நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர்.
ஐயப்ப "சத்ய' :

பம்பையாற்றின் கரையில் ஓர் இரவு தங்கி, இரவில் ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபடுகின்றனர். பின்னர், இருமுடியின் பின் முடியிலுள்ள சமையல் சாமான்களைக் கொண்டு சமைக்கின்றனர். அந்த உணவை ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்து, அதை பக்தர்களுக்கு விருந்தாக (சத்ய) கொடுத்து உபசரிக்கின்றனர். பக்தனை உபசரிப்பது பகவானையே (ஐயப்பன்) உபசரிப்பது போல என கருதுகின்றனர். ஐயப்பனே பக்தர்களின் வடிவில் சாப்பிடுவதாக ஐதீகம். இந்த பூஜையை "பம்பா சக்தி' என்றும், "சக்தி பூஜை' என்றும் சொல்வர்.பம்பா கணபதி :

பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள கணபதி, ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில் வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம். பெண்கள் இப்பகுதியைத் தாண்டி மலையில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.நீலிமலை:

இந்த மலையில் ஏறுவதும் கரிமலையில் ஏறுவது போல் மிகக்கடினம். கால் முட்டி, தரையில் உரசுமளவுக்கு மிகவும் சிரமப்பட்டு இந்த மலையை ஏற வேண்டும். நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்த தாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது.
இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை "சுப்பிரமணியர் பாதை' என்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.


சபரிபீடம்:

நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் "சபரிமலை' என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...


ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம்.
அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.
யானைப்பாதை :

சபரிபீடத்தை அடுத்து சன்னிதானத்திற்கு செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை எனப்படுகிறது. ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி பாதை வழியாகத்தான் செல்கின்றனர்.சரங்குத்தி:

இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். இங்கு கன்னிச்சாமிகள், எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு கொண்டுவரும் மரக்கத்திகளை போட்டு வழிபடுகின்றனர். இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் அடையலாம்.


சன்னிதானம்:

சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, மனம் உற்சாகமாகிறது. ஐயப்பன் சன்னிதானம் நெருங்க நெருங்க "சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது.பொன்னு பதினெட்டாம் படி:

சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள். இந்த படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது.
18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும்.

நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.

"தத்வமஸி':

பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் "தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது "நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். ""ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.


காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான், இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ, அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு'' என்பது இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.ஐயப்பன் மூலஸ்தானம் :

படியேறிய பக்தர்கள் கொடிமரம் தாண்டி கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவை கண்டு மனமாற வேண்டிக்கொள்ளலாம். ஐயப்பனை தரிசித்தாலே இந்தப்பிறவியின் பலனை அடைந்த சந்தோஷம் ஏற்படும்.
மூலஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு "சின்முத்திரை' காட்டுகிறார். "சித்' என்றால் "அறிவு'. இந்த வார்த்தையே "சின்' என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை.

""மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம் (பொறாமை), மாயை(உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே பரமாத்மாவாகிய நான். ஆம்...மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம்,''என்கிறார்.
யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை "யோக பட்டம்' என்பர்.

நெய் அபிஷேகம் :

ஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும்.அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம் செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.மஞ்சமாதா :

ஐயப்பன் கோயிலுக்கு இடது பக்கம் மஞ்சமாதா தனிசன்னதியில் அருளுகிறாள். இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.இங்குள்ள மணி மண்டபத்தில் தான் ஐயப்பனின் திருவாபரணப்பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இவளது சன்னதிக்கு அருகில் நாகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கிவருவர்.

ஜோதி தரிசனம்:

எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.

பதினெட்டாம் படி பாலகன் வரலாறு்--swami ayyapan

அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....

தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் ‘ட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். ராஜராஜன் என்ற அந்த ராஜகுமாரன் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது ‘ழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.

இது ‘ழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறனர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை தேவலோகத்தில் நின்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாதுஎன்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.

மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.அச்சம் தீர்க்கும் அச்சன் கோவில்
அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை ‘ழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.

ஐயப்பன் பாலகனாக வளர்ந்தது குளத்துப்புழையில்.இளைஞனானதும் அவர் அச்சன்கோயில் வந்தார். சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும்.

அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர ஐயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்குவாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.

ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.

அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

சபரிமலை பிறந்த கதை--Sabarimalai story

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர நாட்டின் ஒரு பகுதி சிதறுண்டு செழுமை குன்றியிருந்தது. உள்நாட்டு கலவரக்காரர்கள் பெருகி நலிந்திருந்தது. கரிமலையில் வசித்த உதயன் என்ற கொள்ளையன் சபரிமலைக்கோயிலை தகர்த்து, பூஜாரிகளை கொன்று, ஐம்பொன் ஐயப்பனை களவாடி சென்றான். எனவே, நாட்டை காக்கும் வீரனாக சாஸ்தா அவதாரம் எடுத்தார்.உதயன் திருவிதாங்கூர் அரசின் அரண்மனை செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு இளவரசியை கடத்த முயற்சி செய்தான். ஜயந்தன் என்பவன் அவளை காப்பாற்றி மணந்து கொண்டான். அவர்களுக்கு சாஸ்தா மகனாகப் பிறந்தார். "ஐயப்பன்' என்று அவனுக்கு பெயர் சூட்டினர். ஜயந்தன் ஐயப்பனுக்கு யுத்த பயிற்சிகளுடன் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தான்.

பந்தள அரண்மனையில் பணியில் சேர்ந்தார் ஐயப்பன். அவனது அறிவும் வீரமும் மன்னனை கவர்ந்தது. எனவே தன் அரசின் முதல் தளபதியாகவும், பின் பந்தள மன்னனாக்கி தன் வாரிசாகவும் உயர்த்தினான். இதை கடுத்தை, மல்லன் என்ற தளபதிகள் எதிர்த்தனர். இவர்களை வென்று அவர்களுக்கு பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்து கொண்டார் ஐயப்பன். வாபர் என்ற கடல் கொள்ளையனை எதிர்த்து போர் செய்து, தன் நண்பனாக்கி கொண்டார்.

யோகம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கற்ற ஐயப்பன் மாபெரும் சக்தி பெற்றவராக திகழ்ந்தார். கொச்சியின் தளபதி சிறமூரப்பன் என்பவனை தன் வசப்படுத்தினார். அவனது மகள் "சிறுகூத்தி' என்பவள் ஐயப்பனை மணக்க விருப்பம் கொண்டாள். இதை விரும்பாத ஐயப்பன் அவள் மனதை மாற்றி ஆன்மநெறியில் திருப்பி விட்டார்.


பாண்டியநாட்டில் இருந்து சேரநாட்டில் புகுந்து கொள்ளையடித்தவர்களை பிடிக்க திட்டமிட்டார். இதற்காக, பாண்டிய மன்னர்களிடம் தான் யார் என்பதை காட்டி கொள்ளாமல், சேவனாக பணி ஏற்றார். தன் வீரத்தாலும், அறிவாலும், நேர்மையாலும் பாண்டிய அரசனிடம் நற்பெயர் பெற்றார். ஆனால் பாண்டிய நாட்டு அரசி, இவன் ஒற்றனாக இருப்பான் என தவறாக கருதி, அதை அரசனிடம் கூறாமல், தனக்கு தலைவலி என்றும், அதற்கு புலிப்பால் வேண்டும் என கூறி ஐயப்பனை காட்டிற்கு அனுப்பினாள். தெய்வப்பிறவியான ஐயப்பன் இந்திராதி தேவர்களை புலிகளாக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார். அத்துடன் தான் யார் என்பதை மன்னனிடம் கூறி, பாண்டிய நாட்டு சிற்றரசர்களாலோ, கொள்ளையர்களாலோ தன் நாட்டிற்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என உதவியும் கேட்டார். பாண்டிய மன்னனும் மகிழ்ந்து எப்போதும் உதவி செய்ய காத்திருக்கிறேன் என கூறி அனுப்பி வைத்தான்.

பந்தளம் வந்த ஐயப்பன், கரிமலைப்பகுதியில் மறைந்திருந்து தொல்லை கொடுத்து உதயனை ஒடுக்க திட்டமிட்டார்.


தன் படைகளை மூன்று பிரிவுகளாக்கி, அதன் தலைவர்களாக கொச்சுக்கடுத்தை, வாவர், மல்லன் ஆகியோர்களை நியமித்து கொள்ளையர்களை வென்று வர அனுப்பி வைத்தார். அதன்படி அவர்கள் மூவரும் எரிமேலியிலிருந்து ஒன்று கூடி, விரதமிருந்து, களைப்பு தெரியாமல் இருக்க ஆடியும் பாடியும் பெருந்தோட்டில் தங்கி, அழுதாநதியில் குளித்து காவல் தெய்வமான சாஸ்தாவை நினைத்து பூஜை செய்ய வேண்டும். பின் கரிமலை அடைந்து அங்கிருந்து இஞ்சிப்பாறை கோட்டை மற்றும் கொள்ளையர்களின் மறைவிட கோட்டைகளை அழித்து, எதிரிகளை வென்று பெரியானை வட்டம், சிறியானை வட்டம் கடந்து, பம்பை நதிக்கரையில் இறந்த வீரர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். அந்த நதியை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதன்பின் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் கடந்து, சரங்குத்தியில் மீதி ஆயுதங்களை சேர்க்க வேண்டும். மீண்டும் ஆயுதம் எடுக்கும் நிலை வரக்கூடாது என வணங்கி, பதினெட்டு தத்துவப்படிகளை கடந்து என்னை காண வர வேண்டும் என கூறினார். இதனை அறிந்த பாண்டிய மன்னன் சாஸ்தாவே தன்னிடம் ஐயப்பன் என்ற பெயரில் சேகவம் புரிந்ததை அறிந்து மகிழ்ந்து அவருக்கு சபரிமலையில் கோயில் கட்டினான்.- டி.எஸ்.கிருஷ்ணன்வன சக்கரவர்த்திசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்ற தலம் அச்சன்கோவில். சிறுவனாக குளத்துப்புழையில் வளர்ந்த சாஸ்தா இளைஞர் பருவத்தில் இத்தலத்தில் வசித்ததாக வரலாறு. இங்கு சாஸ்தா வனத்தை காக்கும் அரசராக பூரணா, புஷ்கலை தேவியருடன் இருக்கிறார். பரசுராமர் கட்டிய இக்கோயிலில் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் அருளுவது விசேஷம்.

இங்கு மார்கழி மாதம் முதல் நாளில் இருந்து பத்து நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. பிற ஐயப்பன் கோயில்களில் இல்லாத சிறப்பாக இத்திருவிழாவின் போது தேரோட்டம் நடத்தப்படுகிறது. விஷப்பூச்சிகளால் கடிபட்டவர்கள் மூலவரின் மேனியில் பூசியிருக்கும் சந்தனத்தை தேய்த்துக்கொண்டால் விஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.நாகராஜா, நாகயட்சி


ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள பஸ்மக்குளத்திற்கு வடக்கே நாகராஜாவையும், நாகயட்சியையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். இங்கே சர்ப்ப பாட்டு பாடப்படும். குழந்தை இல்லாத பக்தர்கள், சர்ப்ப பாட்டு வழிபாட்டில் கலந்து கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. நாகயட்சிக்கு பட்டுப்புடவை, பூ, குங்குமம் ஆகியவற்றை வழிபாட்டு பொருட்களாக கொடுக்கலாம். நாகராஜாவிற்கு மஞ்சள் பொடி, கற்பூரம் வழங்கலாம்.


மாளிகை புறத்தம்மைக்கும் திருவாபரணம்


சபரிமலையில் ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் ஆபரணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதையும் தனியாக ஒரு பெட்டியில் வைத்து கொண்டு வருகிறார்கள். ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தப்பட்டு பூஜை நடக்கும் போது மாளிகை புறத்தம்மனுக்கும் பூஜை நடத்தப்படும். மகர ஜோதி முடிந்த பிறகும் ஆறு நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு நாட்களிலும் நடக்கும் விழாவின் நாயகி மாளிகைபுறத்தம்மன் தான். ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.


பரிசோதகர்சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் வாபர் எனும் இஸ்லாமியர் ஒருவர் வசித்து வந்தார். கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடம் இருந்து வழிப்பறி செய்து அதனை ஏழைகளுக்கு கொடுத்தார். அப்பகுதியை ஆண்ட அரசரால் அவரை பிடிக்கமுடியாததால், வாபரின் செயலுக்கு முடிவு கட்டும்படி ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். பாலகனாக இருந்த ஐயப்பனின் பேச்சை வாபர் கேட்பதாக இல்லை. எனவே அவரை வதம் செய்ய சென்றார் ஐயப்பன். அவரிடம் வாபர், "என்னைக் கொன்றால் என்னை நம்பியிருக்கும் மக்களுக்கு யார் ஆதரவு?' என்றார். அவர்களை தான் பார்த்துக் கொள்வதாக கூறிய ஐயப்பன், அவருக்கு பரிசோதிக்கும் பணியையும் கொடுத்தார்.

சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கு விபூதியை பிரசாதமாக தருவது சிறப்பு.மனைவியை பிரிந்த சாஸ்தா


ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள்.


பம்பா தர்ப்பணம்


பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார் என புராணங்கள் கூறுகின்றன.


ஐயப்பனின் சின்முத்திரை
பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார்.அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

ஆரம்பகால பூஜை

ஒரு காலத்தில் சபரிமலையில் தர்மசாஸ்தாவுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு நாள் மகரஜோதி அன்று மட்டும்தான் பூஜை நடந்தது. நிலக்கல் என்ற இடத்திலிருந்து பக்தர்கள் சென்று பூஜை நடத்தி வந்துள்ளனர்.

ஐயப்பன் தர்மசாஸ்தாவிடம் ஐக்கியமான பிறகுதான் மண்டல பூஜை, மகரவிளக்கு, மாத பூஜை என படிப்படியாக பூஜைகள் பெருகின. தர்மசாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு என்பதை இந்த தகவல் தெரிவிக்கிறது.


பாதுகாப்பாக வரும் கருடன்ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், ""நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும்'' என்றார்.


"அப்படியானால் நான் உன்னை எப்படி காணவருவேன்' என மகாராஜா கேட்டார். அதற்கு மணிகண்டன், "நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம்' என அருள்பாலித்தார். அதன்படி பல இடங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே அமர்ந்துவிடுவார். ஐயோ! அப்பா! என அவர் அடிக்கடி சொல்வார். இந்த சொற்களே திரிந்து "ஐயப்பன்' என ஆகிவிட்டதாக சொல்லப்படுவதுண்டு. இப்போதும் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது கருடன் நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக வருவது விசேஷ அம்சமாகும்.பம்பா தர்ப்பணம்


பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப் படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார்.


பந்தளம் அரண்மனை உருவான ஆண்டு


பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரதுமந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையிலிருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுபடுத்தினர்.


பஸ்மக்குள தீர்த்தம்ஐயப்பன் கோயிலில் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுவது பஸ்மக்குளம். ஒரு காலத்தில் இக்குளத்து நீர் தேங்காய் தண்ணீரை விட சுவையாக இருந்தது. இதில் பார்வை பட்டாலே பாவங்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. கூட்டம்

அதிகமான பிறகு, இதன் பெருமை தெரியாமல் பக்தர்கள் இதன் கரையை கழிவறையாக்கி விட்டனர். தற்போது இக்குளம் ஓரளவு சீரமைக்கப்படிருக்கிறது. பக்தர்கள் தயவு செய்து இக்குளத்தை பாழ்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இக்குளத்தை தூரெடுத்து, தலையில் தண்ணீர் எடுத்து தெளிக்கும் அளவுக்கு மட்டும் வழிகளை அடைத்து விட்டால், இதன் பழம்பெருமை பாதுகாக்கப்படும்.ஐயப்பன் வரலாறு காட்டும் தத்துவம்கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

சபரிமலை ஐயப்பனின் வரலாற்றில் முதலில் ஆடம்பரமான அரண்மனை வாழ்வு.. இது நிலைத்ததா என்றால் இல்லை. தெய்வப்பிறவியான ஐயப்பனுக்கு கூட இந்த வாழ்வு நிலைக்கவில்லை என்றால் சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைத்துவிடுமா என்ன... எனவேதான் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எளிமையான ஏற்றத்தாழ்வற்ற சீருடை அணிந்து, ஒன்றுபோல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கிவிட்டு வருகிறோம்.தியானத்தில் கவனம்


ஐயப்பன் சபரிமலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.


மதுரையில் ஒரு சபரிபரிமலையில் மகரவிளக்கு பூஜை கொண்டாடுவதைப்போல் மதுரை விளாச்சேரி ஐயப்பன் கோயிலிலும் விழா கொண்டாடப்படுகிறது. புதுசாரி விஷ்ணு நம்பூதிரி என்பவர் பார்த்த தேவபிரஸ்னத்தின்படி இக்கோயில் கட்டப்பட்டது. 1980ல் சிருங்கேரி சாரதாபீட மடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் அடிக்கல் நாட்டினார். இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது.


கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது. கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.1986 ஜூலை 13ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கல்லூர் மாதவன் நம்பூதிரி கும்பாபிஷேகத்தை நடத்தினார். துவஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) ஜூன் 2001லும், நவக்கிரகங்கள் 2005லும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இங்கு தினமும் கணபதிஹோமம் நடக்கிறது. ஐயப்பனுக்கு 3 முறையும், துர்க்காதேவிக்கு 2 முறையும் நம்பூதிரிகளால் பூஜை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழியில் சுத்திகலசம், எழுநெல்லிப்பூ, ஸ்ரீபூதபலி, பணி, உத்சவபலி, பள்ளி வேட்டை, ஆறாட்டு, அன்னதானம் ஆகியவை சபரிமலையைப் போலவே நடத்தப்படுகிறது. தற்போது உள்ள கோயிலை சீரமைத்து, சுப்ரமணியர், சிவன், குருவாயூரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு 45 லட்சம் ரூபாய் செலவில் சன்னதிகள் கட்டப்பட்டு 2007 ஜூலை 15ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அடுத்த கட்டமாக 60 லட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுரம், தங்கும் விடுதி, தியான அறை, ஆடிட்டோரியம், கோயில் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி ஆகியவை கட்டப்பட உள்ளது. தினமும் அன்னதானம், மருத்துவ உதவி, சமஸ்கிருத, திருக்குறள் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பணி தொடர்பாக, பொருளாளர், ஐயப்பா சேவா சங்கம், 175, விளாச்சேரி மெயின்ரோடு, முனியாண்டிபுரம், மதுரை 625 004 போன்: 0452-237 1870 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இருப்பிடம்:


மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து(6கி.மீ) விளாச்சேரி செல்லும் பஸ்களில், சவுராஷ்டிரா கல்லூரி ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும்.


நாலும் அறிந்த நாயகன்
நாலும் தெரிந்தவர் என்றால் "அனைத்தும் அறிந்தவர்' என்று பொருள். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வார்த்தையைச் சொல்வதுண்டு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களைக் கரைத்துக் குடித்தவரே நாலும் அறிந்தவர் என்ற பொருளில் சொல்லப்படுவதுண்டு. சபரிமலை ஐயப்பனும் "நாலும் அறிந்தவர்' ஆகிறார்.
ஏனெனில், அவர் நான்கு ஆசனங்களையும், நான்குவித முத்திரையையும் உள்ளடக்கி அருள்பாலிக்கிறார்.

ஐயப்பனின் 4 ஆசனங்கள்:

1.தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரையிலும், 2.கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராணா முத்திரையிலும், 3.குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், 4.அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள் பாலிக்கறார். இப்படி நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும் தான். படத்தில் காட்டியுள்ளபடி,ஐயப்பன் லிங்க வடிவில் (மேல்முக்கோணம்) ஆண் தன் மையாகவும், சங்கு வடிவில் (கீழ் முக்கோணம்) பெண் தன்மையாகவும் இரண்டறக் கலந்து உலக உயிர்கள் அனைத் தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார்.

சிவனது நெற்றிக்கண் பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். இவரது சின்னம் அறுகோண நட்சத்திரம். ஐயப்பனை முருகனின் இன்னொரு அம்சமாகவும் சொல்லலாம். அறுகோணத்தை பிரித்தால், மேல் முக்கோணம், கீழ் முக்கோணம் என இரண்டு முக்கோணம் வரும். இந்த இரண்டு முக்கோணமும் சேர்ந்த அமைப்பில் தான் ஐயப்பன் தவமிருக்கிறார்.

சிவன் ஞானத்தை வழங்குகிறார். விஷ்ணு மோட்சத்தை வழங்குகிறார். இவர்களின் அம்சமாக உள்ள அரிகரபுத்திரனோ இவை இரண்டையும் வழங்கும் வள்ளலாக விளங்குகிறார்.

ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத் தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள் பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

ஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது, சிவன் பார்வதி வந்தால் கூட எழுந்திருக்கக்கூடாது என்பதற்காக என கூறப்படுவது சரியானதாகாது. அவர், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.

யோகநிலையில் காலை வைத்து, வயிற்றை அழுத்தி, மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியை ஞான சக்தியாக மாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் நிலையில் இருப்பதால் தான், கலியுகத்திலும் தன்பக்கம் பக்தர்களை இவ்வளவு அதிகமாக ஈர்க்கமுடிகிறது.

ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம். ஐயப்பனின் இந்த ஆசனத்தை நாம் விரதமிருந்து சுத்தமான கண்களுடனும், மனதை அடக்கிய நிலையிலும் பார்த்தால், நமது உள்ளம் நிரந்தரமாக தூய்மையாகி விடும்.படிப்பு தரும் குட்டி சாஸ்தா
கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும்குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

சரண கோவை

மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் தினமும் காலை, மாலையில் நீராடி விட்டு ஐயப்பனின் 108 சரணக்கோவையை மனதில் பயபக்தியுடன் பாடவேண்டும். இதனை மிகவும்மாப்பிள்ளை ஐயப்பன்


சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவின் இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.


ஐயப்பன் கோயிலில் தீப வழிபாடு


கோயம்புத்தூர் சித்தாபுதூரில் ஐயப்பன் கோயில் உள்ளது. சபரிமலை கோயில் போலவே கட்டப்பட்டிருப்பதும், அங்கு நடக்கும் பூஜை முறைகளைப் போலவே பூஜைகள் செய்வதும் இத்தலத்தின் சிறப்பு. நம்பூதிரிகளே இங்கு பூஜைகளை செய்கின்றனர். பிரகாரத்தில் நெய்தீப மேடை உள்ளது. ஐயப்பனிடம் வேண்டிக்கொண்டு இங்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. குருவாயூரப்பன், பகவதிதேவி, பிரம்மரக்ஷி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.


சென்னை ஐயப்பன்


சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது.
சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப் பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன. மகரஜோதி விழாவும் நடத்தப்படுகிறது.


வில்வ இலை அபிஷேகம்


சிவ, விஷ்ணுவின் மைந்தனாக பிறந்த ஐயப்பன் கிராமங்களில் அய்யனாராக அருள்புரிகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், மோகினியாக இருந்து தன்னைப் பெற்ற பெருமாளின் பெயரையும் சேர்த்து "சேவுகபெருமாள் அய்யனார்' என்றழைக்கப்படுகிறார். அத்துடன் தனது தந்தை சிவனுக்கு உகந்த வில்வ இலையை பூஜிக்கும் பேறு பெற்றவராக இருக்கிறார். மகுடம், பட்டைகள் அணிந்து வீராசனத்தில் அமர்ந்து பூர்ண புஷ்கலா தேவியுடன் காட்சி தருகிறார். சிவன் சுயம்பு மூர்த்தியாக பூவைவல்லி அம்பாளுடன் அருள் பாலிக்கிறார். தந்தையும், மகனும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் அற்புத தலம் இது.

போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள்--Sabarimalai bus Routs

சென்னையிலிருந்து

1. சென்னையிலிருந்து சபரிமலை தூரம் 780 கி.மீ
2. சென்னையிலிருந்து பம்பைக்கு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சிறப்பு அரசு பஸ் விடப்படுகிறது. கட்டணம் ரூ.510 (தேனி, கம்பம் வழியாக)
3. சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மதியம் 3.25 மணிக்கும், சென்னை - திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணிக்கு புறப்படுகிறது. கோட்டயத்தில் இறங்க வேண்டும்.

பாண்டிச்சேரியிலிருந்து

பாண்டிச்சேரியிலிருந்து சபரிமலைக்கு 3 வழிகளில் செல்லலாம்.
1. பாண்டி - விழுப்புரம் - திருச்சி - மதுரை- குற்றாலம் - புனலூர் - பம்பை 650 கி.மீ
2. பாண்டி - விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல்- குமுளி - எருமேலி- பம்பை 625 கி.மீ
3. பாண்டி - விழுப்புரம் - சேலம் - கோயம்புத்தூர் - குருவாயூர் - கோட்டயம் - எருமேலி-பம்பை 750 கி.மீ

ரயில் வழி....
கடலூரிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரசில் சென்று அங்கிருந்து சபரிமலைக்கு செல்லலாம்.வேலூரிலிருந்து

1. வேலூர் - ஆம்பூர்-வாணியம்பாடி - திருப்பத்தூர் - தர்மபுரி - பவானி - மேட்டூர் - பெருந்துறை - கோவை - பாலக்காடு - குருவாயூர் - சோட்டானிக்கரை - வைக்கம் - கோட்டயம் - எருமேலி - பம்பை - சபரிமலை 830 கி.மீ
2. வேலூர் - திருவண்ணாமலை - திருச்சி - மதுரை - குற்றாலம் - செங்கோட்டை- கோட்டயம் - வடசேரிக்கரா - பம்பை - சபரிமலை 760 கி.மீ
3. வேலூர் - திருவண்ணாமலை - திருக்கோயிலூர் - மடப்பட்டு - உளுந்தூர்பேட்டை - திருச்சி - திண்டுக்கல் - தேனி - கம்பம் - எருமேலி - பம்பை - சபரிமலை 689 கி.மீ

ஈரோட்டிலிருந்து

ரயிலில் செல்பவர்கள், ஈரோடு வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சென்று, செங்கனூர் இறங்கி, அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
ஈரோட்டிலிருந்து நேரடி பஸ் வசதி இல்லை. சேலம் - குருவாயூர், சேலம் - எர்ணாகுளம் அரசு விரைவு பஸ்கள் ஈரோடு வழியாக செல்கின்றன. குருவாயூர் அல்லது எர்ணாகுளம் சென்று அங்கிருந்து சபரிமலை செல்ல வேண்டும்.
இந்த பஸ்களின் விபரம்:
சேலம் - குருவாயூர் வழி: ஈரோடு, கோவை, பாலக்காடு, திருசசூர். (ஈரோட்டிலிருந்து எர்ணாகுளம் தூரம்: சுமார் 310 கி.மீ.)

கோவையிலிருந்து

ரயிலில் செல்பவர்கள், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சென்று, செங்கனூர் இறங்கி, அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
கோவையிலிருந்து 3 வழிகளில் சபரிமலை செல்லலாம்.
1. கோவை - திருச்சூர் - பெரும்பாவூர் - தொடுபுழா - ஈராட்டுபேட்டா - காஞ்சிராபள்ளி - எருமேலி - சாலக்கயம் - சபரிமலை 330 கி.மீ
2. கோவை - திருச்சூர் - எர்ணாகுளம் - அரூர் - சேர்த்தலை - ஆலப்புழை - பத்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 380 கி.மீ
3. கோவை - பாலக்காடு - எர்ணாகுளம் - கோட்டயம் - திருவல்லா - பந்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 360 கி.மீ

திருச்சியிலிருந்து

திருச்சியிலிருந்து மணப்பாறை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி, கம்பம், குமுளி வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.
1. திருச்சி - குமுளி பயண தூரம் 241 கி.மீ
2. குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், பாம்பனாறு, முண்டக்கயம், காஞ்சிரம்பள்ளி, எருமேலி வழியாக பம்பை வரை கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குமுளி - பம்பா பயண தூரம்: சுமார் 115 கி.மீ


திருநெல்வேலியிலிருந்து

ரயிலில் செல்பவர்கள், சென்னையிலிருந்து திருநெல்வேலி வழியாக குருவாயூர் எக்ஸ்பிரசில் செங்கனூரில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில் சபரிமலை செல்லலாம். திருநெல்வேலியிலிருந்து பஸ்சில் 2 வழிகளில் சபரிமலை செல்லலாம்
1. திருநெல்வேலி - செங்கோட்டை - அச்சங்கோவில் - ஆரியங்காவு- புனலூர் - பத்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 228 கி.மீ
2, திருநெல்வேலி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் - கொட்டாரக்கரை-சாலக்கயம் - பம்பை - சபரிமலை 329 கி.மீ


மதுரையிலிருந்து....

மதுரையிலிருந்து பஸ்சில் எருமேலியை அடையும் வழிகள்.
1. மதுரை - நாகர்கோவில் - திருவனந்தபுரம் - - கொட்டாரக்கரா - பந்தளம் - எருமேலி 474 கி.மீ
2. மதுரை - குற்றாலம் - செங்கோட்டை - அச்சங்கோவில் - ஆரியங்காவு - குளத்துப்புழை-எருமேலி 385 கி.மீ
3. மதுரை - கம்பம் - குமுளி - வண்டிப்பெரியார் - காஞ்சிரப்பள்ளி - எருமேலி 253 கி.மீ
எருமேலியிலிருந்து பம்பைக்கு ரான்னிவழி - 80 கி.மீ
எருமேலியிலிருந்து காட்டுவழி (பெரியபாதை) காளகட்டி, அழுதா, கரிமலை, பம்பை, சபரிமலை வரை 56 கி.மீ
5. பம்மை - சபரிமலை 5 கி.மீ
6. மதுரையிலிருந்து பம்பைக்கு நாள்தோறும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் செல்கிறது.

ரயில் வழி....
1. மதுரையிலிருந்து சபரிமலை சென்றடைய நேரடி ரயில் வசதி இல்லை. இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் .அந்த ரயிலில் செங்கோட்டை சென்று அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.
2. மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 6.30 மணி, 11 மணி, மாலை 5 மணிக்கு பாசஞ்சர் ரயில் உள்ளது. அந்த ரயிலில் செங்கோட்டை சென்று அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.

கேரள பஸ் சர்வீஸ்

சபரிமலை சீசன் ஆரம்பமானதும் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, பந்தளம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், எருமேலி போன்ற இடங்களிலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும். வழக்கமான கட்டணத்திலிருந்து 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

சபரிமலைக்கு முக்கிய வழிகளும் தூரமும்

கோட்டயம் வழி
1. கோட்டயம் - கோழஞ்சேரி - ரான்னி - பம்பை - 119 கி.மீ
2. கோட்டயம் - கொடுங்கூர் - மணிமல - பம்பை - 105 கி.மீ
3. கோட்டயம் - மணிமலை - அத்திக்கயம் - பம்பை - 103 கி.மீ
4. கோட்டயம் - பொன்குன்னம் - எருமேலி - பிலாப்பள்ளி - பம்பை - 90 கி.மீ

எருமேலி வழி
5. எருமேலி - ரான்னி - வடசேரிக்கரை - பம்பை - 76 கி.மீ
6. எருமேலி - கண்ணமலை - பம்பை - 56 கி.மீ
7. எருமேலி - அத்திக்கயம் - பெருநாடு - பம்பை - 64 கி.மீ
8. எருமேலி - செத்தோங்கரை - அத்திக்கயம் - பம்பை - 69 கி.மீ

பந்தளம் வழி
9.பந்தளம்- பத்தனம்திட்டா - வடசேரிக்கரை - பம்பை - 84 கி.மீ

செங்கோட்டை வழி:
10. செங்கோட்டை - புணலூர் - பத்தனம்திட்டா - பம்பை - 170 கி.மீ
11. குமுளி - வண்டி பெரியாறு - எருமேலி - பம்பை - 180 கி.மீ
12. நாகர்கோவில் - திருவனந்தபுரம் - பத்தனம்திட்டா - வடசேரிக்கரை - பம்பை - 225 கி.மீ.
Sunday, November 7, 2010

என் மகளின் தீபாவளி வாழ்த்துக்கள் !!!

காலையிலே கண் விழித்தவள் கதிரவனை தட்டி எழுப்பி
கடமையை செய்ய அனுப்புகிறாள் !

கடிகார முள் திருப்பிய கதிரவன் கண் விழித்து
பார்க்கிறான் என் கண்மணியை !!

சோம்பல் முறித்து மெல்லிய விசும்பலுடன் எழுந்த என் மகள்
சற்றே பசி தீர்க்க வேண்டி சிறியதாய் ஒரழுகை !

அழுகையின் அர்த்தமரிந்தவலாய் என்னவள்
அரவனைபாய் அவளருகே அணைக்கிறாள் !!

அழுகையின் அளவை குறைகிறது
ஒரு கையால் அணைத்தபடி மறு கையால்
தலையை கோதியபடி ஆனந்த புன்னகை உதிர்க்கிறாள் எனதுரியவள் !!

போதும் என்ற தோரணையில் தாயை தள்ளி விட்டபடி
முகத்தை தூக்கி பார்க்கிறாள் என் குழந்தை !

" போதுமாட என் தங்கமே" என்று அள்ளி
அணைக்கையில் ஆனந்தம் கொள்கிறாள் !!


பசியை ஆற்றி விட்டு தன் வேகத்தை சற்றே முடுக்குகிறாள்
புத்தம் புதிய நீரை பாத்திரத்தில் ஊற்றி
அடுமனையின் மேல் வைத்தவள்
நீரின் இளஞ்சூடினை அறிந்தவளாய் மெல்ல கீழிறக்குகிறாள்

தன் மகளை இரு கைகளால் அள்ளி அணைத்து
அழைத்து செல்கிறாள் !

சிறியதொரு குவளையில் மெல்ல எடுத்து நீரின் சூடு
சுரேரென்று பட்டு விடாமல் தன் கை மீது ஊற்றி குளிபடுகிறாள் !!

தன் அன்னையின் ஆனந்தத்தை உணர்ந்தது போல்
குழந்தை சிறிய முனகலுடன்
அறைத்து வைத்து இருந்த சந்தனமும் சவ்வாதும்
கலந்த மாவினை உடலேங்குங்கும் பூசி வருடிகிறாள் !

அது வரை பொறுத்த என் குழந்தை முகத்தருகே கைகள் வருவதை கண்டு
கோவத்தின் உச்சிக்கு சென்றவளாய் சிலிர்கிறாள் !!

இதை ஏற்கனவே அறிந்து இருந்த என்னவள் சற்றே
சீக்கிரமாய் ஊற்றுகிறாள் நீரை !

குளித்து முடித்து புத்தம் புதிய பெரியதொரு
துணியால் தொட்டு எடுக்கிறாள் நீரினை !!

குளித்த களைப்பில் கண்கள் சொருக என்னவளை
ஏக்கமாய் பார்க்கிறாள் என் தாயவள் !
இதை கண்டு வேகமாய் மேருகேற்றுகிறாள்
வாசனை திரவியங்களை கொண்டு
அணைப்பின் உச்சத்தில் அயர்கிறாள் என் தாயவள் !!

அதற்குள் தான் சென்று தான் வேலைகளை சுளுவாய்
முடித்துக்கொண்டு திரும்புகையில்
குட்டி துயில் முடித்து எழுகிறாள் !

உறக்கம் களைந்து மெல்ல புன்னகைகிறாள்
கைகளை நெளித்து அலுத்து ஆனந்த புன்னகை பூக்கிறாள் !

தைத்து வைத்திருந்த புது பட்டாடையை பரவசமாய்
அணிவித்து விடுகிறாள் !!

"பாருங்க உங்க புள்ள பண்ணுற சேட்டைய" என்று
செல்லமாய் கடிந்தவாறு
"அப்பாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லுங்கடா, என் தங்கம் "
என்று என் குழந்தையின் கைகளை தூக்கி உயர்த்தியவாறுஅனைத்தையும் பார்த்தவாறு ஆனந்த கண்ணீரில்
கணினியின் முன் கண்ட தன் குழந்தையை மெல்ல வருடி
முத்தமிடுகிறான்
அயல் நாட்டில் இருக்கும் அப்பன் !!!!!!

க.ஜெயவேல்

Sunday, October 11, 2009

கணிணிக்கு தேவையான அடிப்படையான அனைத்து மென்பொருட்களும் ஒரே இடத்தில் -All software in one place.

கணிணிக்கு தேவையான அடிப்படையான அனைத்து மென்பொருட்களும் ஒரே இடத்தில்


நம் கணிணியில் அடிப்படையான சில மென்பொருட்களை தரவிறக்க ஒவ்வொரு முறையும் தரவிறக்க ஒவ்வொரு தளங்களில் சென்று தரவிறக்க வேண்டியிருக்கும் அது போல் இல்லாமல் ஒரு மென்பொருள் வழியாக நமக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும் நிறுவ இந்த மென்பொருள் உதவும்

https://getvolery.com/accounts/demo/howtogeek <---- Click here