Wednesday, May 20, 2009

எங்கிருந்து வந்தாயடி !!!

என் இனிய இணையத்தளம் தோழியே எங்கிருந்து தொடங்கியது இந்த நட்பு

பள்ளி திண்ணையில் அழுக்கு சீருடை உடுத்தி அருகருகே அமர்ந்ததும் இல்லை !

குச்சிக்கும் பென்சிலுக்கும்சண்டை இட்டது இல்லை !!
எங்கிருந்து வந்தாயடி ?

முக்கால் மிதிவண்டியில் ஓட்டிச்சென்று பள்ளம் தெரியாமல் விழுந்து கிடகையிலே தூக்கி செண்டறவலும் இல்லை !

பள்ளிபருவதிலே பெரிய தொரு அம்மையால் அவதி படுகையிலே ஆசையாய் அருகமர்ந்தவலும் இல்லை !!

தட்டு முட்டு சாமானைஎல்லாம் பார்து அடித்து பிடித்து சொப்பு சாமனை வாங்கி சோறு பொங்கி உண்டதும் இல்லை !!!

எங்கிருந்து வந்தாயடி ?

பள்ளி சீருடை கலைந்து பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து கல்லூரிக்கு சென்ற பொழுது என்னை வாசல் வழி வரவேற்றதும் இல்லை !

எதிர் எதிர் மேஜைலே அமர்ந்ததும் இல்லை என்னை மட்டுமே எதிர் நோக்கியவளும் இல்லை !!

பின் எங்கிருந்து வந்தாயடி ! ?

படித்திருந்த கணினி துறையிலே வேலை கிடைத்தும் என் கண்ணுக்கு அக படாதவள் அன்று

சற்றே அயர்வில் கணினியின் காதை திருகையில்
எதோ ஒருவள் என்

கவிதையின் வரிகளுக்கு உயிர் கொடுத்து ஓரிரண்டு அர்த்தம் பொதிந்த வாழ்த்துக்கள் ..... ....


நெஞ்சத்திலே சின்னதாய் ஒரு பூரிப்பு ...
என்னயும் அறியாமல் தொடங்ய்ய தொரு நட்பு

என் மீது மிதமான அன்பை சொரிந்தவள் எனக்கும் தெரியாமல் என் குரும்பை ரசித்தவள்

வயது

என்னினும் இரு மடங்கு அனால் என்னை விட சின்னவளாய்

வடிவான முகம்,வாடிடாத சிரிப்பு அறியாத சி்ருமை,அறிவான செயல் நேரான பாதை நெறியான வாழ்கை

திகட்டாத அன்பு நம்பிகையான நட்பு
என்று என் தோழியின் நிறைவை நாள் முழுக்க கூறலாம்

தோழியே

உலகம் எத்துனை சுருங்கி விட்டதடி
நேரினில் காணமல் ஒரு வரி கூட பேசாமல் கணினியின் இந்த ஆர்பாட்டம் இல்லாத அறிமுகத்தால்

என் கணினி தோழியே
நம் இருவருக்குள் உள்ள நட்பு காலங்கடந்த நட்பு !

ஆனால்

அது காதல் கடந்த நட்பு ! !.

என்றும் நேர்மையுடன்

க.ஜெயவேல்