Wednesday, May 20, 2009

என்னவளே !

உன்னை என்று கண்டேனோ அன்றே ஆனேனடி பித்தன்..
பள்ளி படிப்பு முடித்தும் சிறு குழந்தையாய் !

காக்கைக்கும் நரிக்கும் கதை சொன்னாய்
ஆரம்பத்தில் ஆர்சரியமானேன்
சண்டித்தனத்தில் உன் சுட்டித்தனத்தை ரசித்தேன்
குட்டி குட்டி கதை சொல்லி வெட்டி கதை பேசிடுவாய் !

விளையாட்டாய் நான் திரும்புகையில் என் தலை மீதே கொட்டிடுவாள் !!
ஊரில் ஓராயிரம் பேரிருந்தாலும் என்னை மட்டும் ரசிதிடுவாள்
கவிதை நூறு படிக்கையிலே வரி ஏதும் புரியாமல் முழி பிதுங்கிடுவாள்

வார்த்தை நூறு பேசாமல் என் இதயம் பேசும் வார்த்தைக்கு
அவள் மட்டுமே விடையளிபாள்

மனம் கனத்து போய் வருகிண்ற வேலையிலே
தன் மடி தந்து காத்திடுவாள்

மதுவுக்கும் மங்கைக்கும் அடிபட்டு கிடக்கயிலே
ஆதரவாய் அவளருகில் அணைதவள்



ஆயிரம் பேர் அரவணைக்க இருந்தும் என் அன்னைக்கு
அடுத்து ஆதரவு பெற்று அமோக வெற்றி பெற்றவள்

ஆண்டவனிடம் என்னை விட அதிகமாக விண்ணப்பம்
விண்ணப்பம் வைத்திடுவாள் எனக்காக .
கோடி வார்த்தை கேட்டாலும் அவளை நாடி வருவேன்
என கூறும் வார்த்தை க்கு மட்டுமே காத்திருப்பாள்
இரவில் என் குரல் கேட்டே அயர்ந்திடுவாள்
விடிகையில் என் குரல் கேட்டே விழித்திடுவாள்

நினைக்கும் போது புரை ஏறும் என்றால்
என் வாழ்க்கை புரை ஏறியே கழிந்திருக்கும்

என் சோகம் அவளின் சோகம்
என் துயரம் அவளின் துயரம்
என் மகிழ்ச்சி அவளின் மகிழ்ச்சி
என்னவள் மேல் அத்துனையும் நம்பிக்கை

இறைவா உனக்கு கோடான கோடி நன்றிகள்
எனக்கும் மட்டும் இரண்டு தாய் .


ஒருவள் என்னை கருவில் சுமந்து
இரு கருவிழியில் சுமக்கிறாள்

ஒருவள் நெஞ்சில் சுமந்து
என் நினைவில் வாழ்கிறாள்
அவள் அறிவையும் ஆனந்ததையும் தருகிறாள்
ஏ பெண்ணே !
கனமேதும் யோசிக்காமல் உனையே தந்தவளே
உனை பிரிந்து வாழ்வதா
உனை இன்றி வேறொரு பெண்ணை நினைக்க
கூட நெஞ்சிற்கு நேரம் இருக்காது

உனக்கு மட்டும் தான் என் நெஞ்சில் தஞ்சம் இருக்கிறது
என் நெஞ்சம் முழுவதும் நிறைந்தவளே
பார்த்து பார்த்து ரசிப்பவளே

என் இதய கோட்டையில் வசிபவளே
உனக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்
உன்னையே நினைதிருப்பேனடி இறுதிவரை

இதில் ஏதும் மாற்றம் இருப்பின் போராடுவேன்
என் கடைசி சொட்டு குருதி வரை ..!!!!

நம்பிகையுடன்....

க.ஜெயவேல்