Wednesday, May 20, 2009

வேதனை .... !


அவள் அலறிய சப்தத்தில் என் நாடியே நிசப்தமானது!

விண்ணை பிளந்து இரு கூராய் போட்டதொரு கதறல் ! என் நெஞ்சினில் அப்படியொரு படபடப்பு...

சப்தத்தின் நீளம் நீளுகையில் சின்னதாய் ஒரு ஒலி வீருட்டு கேட்கிறது

ஆனந்தத்தை என் கண்களுக்கு மட்டும் கூறியது போல் எனயும் அறியாமல் சிந்தியது நீர்த்துளி

உள் சென்று பார்க்க அனுமதித்த மருத்துவச்சிக்கு என் இருகரங்கள் கைகூப்பின

உள் செல்லும் முன்னே என் கண்கள் தேடியது என்னவளை தான்அருகில் சென்றமர்ந்து உச்சி முகர்ந்து முத்தமிட்டேன் என் சுற்றத்தார் அருகிலிருபதயும் மறந்து

அவளருகிலே சின்ன தொரு பூ பந்தினை போல் கை கால் முளைத்த நிலவினை போல் அழகாய் நெளிந்தது வளைந்து ....
என் இதயக் கண்களால் தொட்டு தடவி வருடி சின்னதாய் ஒரு முத்தம் நெஞ்சிலிருந்து ....

எத்துனை தாக்கம் எத்துனை சந்தோசம் சொர்கத்தின் விளிபில் நின்று கூக்குரல் இட்டது போல்

புத்தம் புதிதாய் மொட்டு திறப்பது போல் மெல்ல வாய் திறந்து மூடியது .....

அப்படியே என் முகம்,அப்படியே என் காதுகள், அப்படியே என் மூக்குகள் என பூரிப்போடு அனைவரையும் பார்க்க

என் இரு கண்கள் ஆயிரம் கோடி முறை புகைபடம் எடுத்து கொண்டு என் இதயத்தில் பதித்து வைத்தது......

எத்துனை சந்தோசம் எத்துனை உல்லாசம் உலகமே எனை நிமிர்த்து பார்ப்பது போல் ஒரு கர்வம்

ஆஹா எப்படி ஒரு ஆனந்தம் !

இறைவா உனக்கு நன்றி..

என் அண்ணை எனை ஈன்றெடுக்கும் போது என்ன வேதனை பட்டிருப்பாளோ என நான் அறிய என்னவளின் வேதனை !!



எங்கிருந்து வந்தாயடி !!!

என் இனிய இணையத்தளம் தோழியே எங்கிருந்து தொடங்கியது இந்த நட்பு

பள்ளி திண்ணையில் அழுக்கு சீருடை உடுத்தி அருகருகே அமர்ந்ததும் இல்லை !

குச்சிக்கும் பென்சிலுக்கும்சண்டை இட்டது இல்லை !!
எங்கிருந்து வந்தாயடி ?

முக்கால் மிதிவண்டியில் ஓட்டிச்சென்று பள்ளம் தெரியாமல் விழுந்து கிடகையிலே தூக்கி செண்டறவலும் இல்லை !

பள்ளிபருவதிலே பெரிய தொரு அம்மையால் அவதி படுகையிலே ஆசையாய் அருகமர்ந்தவலும் இல்லை !!

தட்டு முட்டு சாமானைஎல்லாம் பார்து அடித்து பிடித்து சொப்பு சாமனை வாங்கி சோறு பொங்கி உண்டதும் இல்லை !!!

எங்கிருந்து வந்தாயடி ?

பள்ளி சீருடை கலைந்து பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து கல்லூரிக்கு சென்ற பொழுது என்னை வாசல் வழி வரவேற்றதும் இல்லை !

எதிர் எதிர் மேஜைலே அமர்ந்ததும் இல்லை என்னை மட்டுமே எதிர் நோக்கியவளும் இல்லை !!

பின் எங்கிருந்து வந்தாயடி ! ?

படித்திருந்த கணினி துறையிலே வேலை கிடைத்தும் என் கண்ணுக்கு அக படாதவள் அன்று

சற்றே அயர்வில் கணினியின் காதை திருகையில்
எதோ ஒருவள் என்

கவிதையின் வரிகளுக்கு உயிர் கொடுத்து ஓரிரண்டு அர்த்தம் பொதிந்த வாழ்த்துக்கள் ..... ....


நெஞ்சத்திலே சின்னதாய் ஒரு பூரிப்பு ...
என்னயும் அறியாமல் தொடங்ய்ய தொரு நட்பு

என் மீது மிதமான அன்பை சொரிந்தவள் எனக்கும் தெரியாமல் என் குரும்பை ரசித்தவள்

வயது

என்னினும் இரு மடங்கு அனால் என்னை விட சின்னவளாய்

வடிவான முகம்,வாடிடாத சிரிப்பு அறியாத சி்ருமை,அறிவான செயல் நேரான பாதை நெறியான வாழ்கை

திகட்டாத அன்பு நம்பிகையான நட்பு
என்று என் தோழியின் நிறைவை நாள் முழுக்க கூறலாம்

தோழியே

உலகம் எத்துனை சுருங்கி விட்டதடி
நேரினில் காணமல் ஒரு வரி கூட பேசாமல் கணினியின் இந்த ஆர்பாட்டம் இல்லாத அறிமுகத்தால்

என் கணினி தோழியே
நம் இருவருக்குள் உள்ள நட்பு காலங்கடந்த நட்பு !

ஆனால்

அது காதல் கடந்த நட்பு ! !.

என்றும் நேர்மையுடன்

க.ஜெயவேல்

என் தமிழ் திருவள்ளுவனே....


நெஞ்சு நிமிர்த்தி ஒய்யார ஓங்காரமாய் அமர்ந்து
அதிகாரமாய் ஆயிரத்து முண்ணூற்று முப்பத்தி ஒன்று

நெரிகொண்டு சீர்கொண்டு வழிதடம் மாறாமல் வாழ
வீறு கொண்டு இரு வரி கொண்டு வாழ்வை வடித்தவனே

ஒவ்வொண்றிலும் ரெவ்வெண்டு வரி கொண்டு
அவ்வீரடியில் இவ்வுலகத்தை அடகியவனே

வரிசை மாறாமல் வடித்து வைத்தவனே

தப்பாமல் இம்முப்பால் குடிதவனுக்கு ஈடுக்கு
ஒப்பாமல் ஒருவரும் இல்லை

இப் பூகோள உலகத்திற்கு
நெறி மாறாமல் வாழ கற்று கொடுதவனே

கீதைக்கு முன்னால் நீ கூறி இருந்தால்
உனை அல்லவா வணங்கி இருப்பார்கள்
இறைவன் கூட உன் புகழ் கேட்டு
உன்னை போல் வேறொருவனை படைக்க மறுத்ததாக கேள்வி

அன்னைக்கும் அறிவுக்கும் பண்பிற்கும் பாசத்திற்கும்
தந்தைக்கும் தனயனுக்கும் ஆசைக்கும் மோகதிற்கும்
கற்றவனுக்கும் கல்லதவனுக்கும் அறியனையில் இருபவனுக்கும் ஆண்டியாய் உள்ளவனுக்கும்

என்று எத்துனை எல்லாம் உண்டோ
அத்த்னையிலும் உன் கால் தடங்கள் ...

இந்த அனுபவ படிப்பை பெறுவதற்கு ஆயிரம் ஆண்டுகள்
அவனியில் அவதரிதாயோ

இதை அறியாமல் இன்னும் உன்னை
பற்றி ஆராய்ச்சியில் ஆயிரம் பேர்

வள்ளுவனே

இவையனைத்தும் சிந்தித்து கற்றயோ
இல்லை உனை நிந்தித்து பெற்றாயொ ..

ஈரேலுலகமும் உன்னை மட்டும் தொழுதால் போதும்
பண்ணிய பாவங்கள் பறந்தோடிடும்

மூவிரெண்டு வார்த்தைகள் எழுதினாலே தன் பெயரை
தவறாமல் எழுதும் இவ்வுலகில் உனை போன்று ....

வள்ளுவா

உனை வைத்து அல்லவா என் தமிழ் மொழி
காலம் கனகெடுக்கிறது
இறைவன் ஆசி பெற்ற தெய்வ மகனே
என் தமிழ் திருவள்ளுவனே உனை வணங்குகிறோம்

என்னவளே !

உன்னை என்று கண்டேனோ அன்றே ஆனேனடி பித்தன்..
பள்ளி படிப்பு முடித்தும் சிறு குழந்தையாய் !

காக்கைக்கும் நரிக்கும் கதை சொன்னாய்
ஆரம்பத்தில் ஆர்சரியமானேன்
சண்டித்தனத்தில் உன் சுட்டித்தனத்தை ரசித்தேன்
குட்டி குட்டி கதை சொல்லி வெட்டி கதை பேசிடுவாய் !

விளையாட்டாய் நான் திரும்புகையில் என் தலை மீதே கொட்டிடுவாள் !!
ஊரில் ஓராயிரம் பேரிருந்தாலும் என்னை மட்டும் ரசிதிடுவாள்
கவிதை நூறு படிக்கையிலே வரி ஏதும் புரியாமல் முழி பிதுங்கிடுவாள்

வார்த்தை நூறு பேசாமல் என் இதயம் பேசும் வார்த்தைக்கு
அவள் மட்டுமே விடையளிபாள்

மனம் கனத்து போய் வருகிண்ற வேலையிலே
தன் மடி தந்து காத்திடுவாள்

மதுவுக்கும் மங்கைக்கும் அடிபட்டு கிடக்கயிலே
ஆதரவாய் அவளருகில் அணைதவள்



ஆயிரம் பேர் அரவணைக்க இருந்தும் என் அன்னைக்கு
அடுத்து ஆதரவு பெற்று அமோக வெற்றி பெற்றவள்

ஆண்டவனிடம் என்னை விட அதிகமாக விண்ணப்பம்
விண்ணப்பம் வைத்திடுவாள் எனக்காக .
கோடி வார்த்தை கேட்டாலும் அவளை நாடி வருவேன்
என கூறும் வார்த்தை க்கு மட்டுமே காத்திருப்பாள்
இரவில் என் குரல் கேட்டே அயர்ந்திடுவாள்
விடிகையில் என் குரல் கேட்டே விழித்திடுவாள்

நினைக்கும் போது புரை ஏறும் என்றால்
என் வாழ்க்கை புரை ஏறியே கழிந்திருக்கும்

என் சோகம் அவளின் சோகம்
என் துயரம் அவளின் துயரம்
என் மகிழ்ச்சி அவளின் மகிழ்ச்சி
என்னவள் மேல் அத்துனையும் நம்பிக்கை

இறைவா உனக்கு கோடான கோடி நன்றிகள்
எனக்கும் மட்டும் இரண்டு தாய் .


ஒருவள் என்னை கருவில் சுமந்து
இரு கருவிழியில் சுமக்கிறாள்

ஒருவள் நெஞ்சில் சுமந்து
என் நினைவில் வாழ்கிறாள்
அவள் அறிவையும் ஆனந்ததையும் தருகிறாள்
ஏ பெண்ணே !
கனமேதும் யோசிக்காமல் உனையே தந்தவளே
உனை பிரிந்து வாழ்வதா
உனை இன்றி வேறொரு பெண்ணை நினைக்க
கூட நெஞ்சிற்கு நேரம் இருக்காது

உனக்கு மட்டும் தான் என் நெஞ்சில் தஞ்சம் இருக்கிறது
என் நெஞ்சம் முழுவதும் நிறைந்தவளே
பார்த்து பார்த்து ரசிப்பவளே

என் இதய கோட்டையில் வசிபவளே
உனக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்
உன்னையே நினைதிருப்பேனடி இறுதிவரை

இதில் ஏதும் மாற்றம் இருப்பின் போராடுவேன்
என் கடைசி சொட்டு குருதி வரை ..!!!!

நம்பிகையுடன்....

க.ஜெயவேல்

Tuesday, May 19, 2009

தயவுசெய்து........

எதோஒன்று மனதில் அழுத்தமாய்
சத்தம் ஏதும் இல்லாமல் முனு முனுப்புடன்

விரல்கள் அசைவில் வீரியம் இல்லாமல்
தொடு உணர்ச்சி செயலற்றும்

பார்வைகள் மட்டும் எங்கோ செல்ல
இதயம் இருமுறை மட்டும்

இரு உதடுகள் நீரிண்டி வரண்டு
அருகமந்தவன் கையை மட்டும் விடாமல் பற்றி

வாகனங்களில் செல்பவர்கள் வக்கனை பேசிக்கொண்டு
நிண்டவர்கள், பின் சூழ்ந்தவர்கள் ..

பாவம் என்ற ஒரு வார்த்தை மட்டும் நூரேழு முறை
நேருந்த கடைகாரன் வேருடென்று வேகமாய் சட்டரை சாத்த

வந்து கொண்டிருண்ட சிவப்பனுக்கள் சென்று கொண்டிருந்தன

தயவுசெய்து காத்து விடுங்க என்று முனைப்பாய்
உள் சென்று எட்டி பார்தவர்களில் இவன் பதிநெட்டாதவன்

முச்சில் இருந்த சத்து மெல்ல குறைந்தது
மெல்லமாய் ஆள் காட்டி விரல் மட்டும் உயிர் பெற்று காட்டியது

ரோட்டில் கொட்டி இருந்த மருந்து புட்டியை

இந்த வெறியர்களுக்கு தெரியுமோ !!
என் தாய் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறாள்
தயவுசெய்து
இந்த மருந்தை அவளிடம் .........