கடமையை செய்ய

கடிகார முள் திருப்பிய கதிரவன் கண் விழித்து
பார்க்கிறான் என் கண்மணியை !!
சோம்பல் முறித்து மெல்லிய விசும்பலுடன் எழுந்த என் மகள்
சற்றே பசி தீர்க்க வேண்டி சிறியதாய் ஒரழுகை !
அழுகையின் அர்த்தமரிந்தவலாய் என்னவள்
அரவனைபாய் அவளருகே அணைக்கிறாள் !!
அழுகையின் அளவை குறைகிறது
ஒரு கையால் அணைத்தபடி மறு கையால்
தலையை கோதியபடி ஆனந்த புன்னகை உதிர்க்கிறாள் எனதுரியவள் !!
போதும் என்ற தோரணையில் தாயை தள்ளி விட்டபடி
முகத்தை தூக்கி பார்க்கிறாள் என் குழந்தை !
" போதுமாட என் தங்கமே" என்று அள்ளி
அணைக்கையில் ஆனந்தம் கொள்கிறாள் !!
பசியை ஆற்றி விட்டு தன் வேகத்தை சற்றே முடுக்குகிறாள்

புத்தம் புதிய நீரை பாத்திரத்தில் ஊற்றி
அடுமனையின் மேல் வைத்தவள்
நீரின் இளஞ்சூடினை அறிந்தவளாய் மெல்ல கீழிறக்குகிறாள்
தன் மகளை இரு கைகளால் அள்ளி அணைத்து
அழைத்து செல்கிறாள் !
சிறியதொரு குவளையில் மெல்ல எடுத்து நீரின் சூடு
சுரேரென்று பட்டு விடாமல் தன் கை மீது ஊற்றி குளிபடுகிறாள் !!
தன் அன்னையின் ஆனந்தத்தை உணர்ந்தது போல்
குழந்தை சிறிய முனகலுடன்
அறைத்து வைத்து இருந்த சந்தனமும் சவ்வாதும்
கலந்த மாவினை உடலேங்குங்கும் பூசி வருடிகிறாள் !
அது வரை பொறுத்த என் குழந்தை முகத்தருகே கைகள் வருவதை கண்டு
கோவத்தின் உச்சிக்கு சென்றவளாய் சிலிர்கிறாள் !!
இதை ஏற்கனவே அறிந்து இருந்த என்னவள் சற்றே
சீக்கிரமாய் ஊற்றுகிறாள் நீரை !

குளித்து முடித்து புத்தம் புதிய பெரியதொரு
துணியால் தொட்டு எடுக்கிறாள் நீரினை !!
குளித்த களைப்பில் கண்கள் சொருக என்னவளை
ஏக்கமாய் பார்க்கிறாள் என் தாயவள் !
இதை கண்டு வேகமாய் மேருகேற்றுகிறாள்
வாசனை திரவியங்களை கொண்டு
அணைப்பின் உச்சத்தில் அயர்கிறாள் என் தாயவள் !!
அதற்குள் தான் சென்று தான் வேலைகளை சுளுவாய்
முடித்துக்கொண்டு திரும்புகையில்
குட்டி துயில் முடித்து எழுகிறாள் !
உறக்கம் களைந்து மெல்ல புன்னகைகிறாள்
கைகளை நெளித்து அலுத்து ஆனந்த புன்னகை பூக்கிறாள் !
தைத்து வைத்திருந்த புது பட்டாடையை பரவசமாய்
அணிவித்து விடுகிறாள் !!
"பாருங்க உங்க புள்ள பண்ணுற சேட்டைய" என்று
செல்லமாய் கடிந்தவாறு
"அப்பாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லுங்கடா, என் தங்கம் "
என்று என் குழந்தையின் கைகளை தூக்கி உயர்த்தியவாறு

அனைத்தையும் பார்த்தவாறு ஆனந்த கண்ணீரில்
கணினியின் முன் கண்ட தன் குழந்தையை மெல்ல வருடி
முத்தமிடுகிறான்
அயல் நாட்டில் இருக்கும் அப்பன் !!!!!!
க.ஜெயவேல்